மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம், கொம்மடிக்கோட்டையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ.ஆர். எம். பி புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை முன்பு தொடங்கிய பேரணியை பள்ளி தாளாளர் ஏ.எஸ். கிருபாகரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமைஆசிரியர் ஜெபசிங் மனுவேல் வரவேற்றார். பேரணியானது முக்கிய வீதி வழியாக சென்று பள்ளி வளாகத்தில் வந்து நிறைவடைந்தது. இதில் ஆசிரியர் பயிற்றுனர் ராஜன்ஜெயக்குமார், சிறப்பு ஆசிரியர்கள் திரவியராஜ்வெள்ளப்பழம், ரேவதிசுமைக்காள் ஆகியோர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி குறித்து பேசினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எபனேசர், ஆசிரியர்கள் மேசாக், மார்க், ஜெபத்துரை, பேட்டன், சுடலைமணி, ஜெரோம், உடற்கல்வி ஆசிரியர்கள் வசந்த், ராஜேஷ், பள்ளி கிளார்க் ஜோன்ஸ் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். ஆதிரியர் லயன் டேனியல் நன்றி கூறினார்.

கொம்மடிக்கோட்டை சந்தோஷநாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டென்சன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் தர்மேந்திரராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜான்சன் ஜெபக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளடங்கிய சிறப்பாசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story