ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி


ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குப்பை இல்லாத இடமாக மாற்றுவது குறித்து ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டி,

குப்பை இல்லாத இடமாக மாற்றுவது குறித்து ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 3.6.2022-ந் தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தூய்மை பணிகள், பள்ளி மாணவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டம் குறித்தும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குப்பையில்லா கடற்கரை, மலைகள் பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற தலைப்பை மையமாக கொண்டு ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மலைப்பாதைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் குப்பை இல்லாத இடங்களாக மாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உறுதிமொழி ஏற்பு

ஐந்து லாந்தர் பகுதியில் தொடங்கிய பேரணி காபி ஹவுஸ் ரவுண்டானா, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் கலந்துகொண்டு, நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா பயணிகள் கொண்டு வர வேண்டாம், சாலையோரங்களில் குப்பைகளை வீசக்கூடாது, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

முன்னதாக தூய்மை இந்தியா தொடர்பாக கலெக்டர் அம்ரித் தலைமையில் தூய்மை பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் பலர் பலந்துகொண்டனர்.


Next Story