ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி


ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்துகளை தடுப்பதற்கான வழிகள் குறித்து ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

ஆண்டுதோறும் அக்டோபர் 17-ந் தேதி உலக விபத்து உடல் காய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாலை விபத்துகளை தடுப்பதற்கான வழிகள், விபத்தினால் கை மற்றும் கால் உடைந்திருந்தால் உடனடியாக செய்யக்கூடியவை, விபத்திற்கு பின் உயிரை காப்பாற்ற செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

பேரணி ஆஸ்பத்திரியில் இருந்து ஏ.டி.சி., மாரியம்மன் கோவில் வழியாக சென்று மீண்டும் ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.

இதில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மனோகரி, ் டாக்டர்கள் ரவிசங்கர், அமர்நாத் மற்றும் 150-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story