விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு பேரணி


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு பேரணி
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியினை விருதுநகர் தேசபந்து திடலிலிருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொடங்கி வைத்தார். பேரணியானது விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் செல்வம் தலைமையில் தேசபந்துதிடலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று சாத்தூர் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் வில்லவன் கோதை, ஜோசப்போத்திராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் முருகன், மேற்கு மாவட்ட செயலாளர் சதுரகிரி, தொழிற்சங்க பிரிவு மாவட்ட தலைவர் சக்திவேல் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். அதேபோல சாத்தூரில் எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அணைக்கரைபட்டி கருப்பையா தலைமை தாங்கினார். ரவீந்திரநாத்தாகூர், சாத்தூர் வழக்கறிஞர் சங்க துணைச் செயலாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், சாத்தூர் நகர் மன்ற தலைவர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பிலும் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Next Story