தூய்மை இயக்க திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி


தூய்மை இயக்க திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
x

கோத்தகிரியில் தூய்மை இயக்க திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி தொடங்கி வைத்தார். பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம், மார்க்கெட் வழியாக சென்று காந்தி மைதான புயல் நிவாரண கூடத்தில் நிறைவடைந்தது.

அங்கு நடந்த விழிப்புணர்வு முகாமில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் குறித்தும், தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்று விளக்கப்பட்டது. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. முன்னதாக பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story