பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நேற்று நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் மற்றும் பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த பேரணி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கி 3-ம் மைல் வரை நடந்தது.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி மற்றும் பாலின சமுத்துவ உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீரபுத்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story