சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருப்பத்தூர் காவல்துறை உட்கோட்டம் சார்பில் திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தை திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிவது அவசியம், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் சென்றனர். மேலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

ஊர்வலம் கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக சென்று மீண்டும் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே முடிவடைந்தது.

நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், செல்வராஜ், பலராமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story