வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி


வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:43+05:30)

கூடலூர், கோத்தகிரியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர், கோத்தகிரியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி

கூடலூரில் வருவாய்த்துறை சார்பில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று தனியார் பள்ளி மைதானத்தை அடைந்தது.

பேரணியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அனைவரும் வாக்களிப்போம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி சென்றனர். முன்னதாக ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா பேசும்போது, 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அட்டை பெற விண்ணப்பிக்க வேண்டும். நாம் அனைவரும் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்.

வாக்களிக்க வேண்டும்

நம் நாட்டின் தலைவர்களை தேர்வு செய்யக்கூடிய சக்தியாக வாக்குகள் உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து அனைவரும் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் தாசில்தார் சித்தராஜ், துணை தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர் சகீர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

இதேபோல் கோத்தகிரியில் வருவாய்த்துறை சார்பில், வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள், வருவாய்த்துறையினர் பங்கேற்ற பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாசில்தார் அலுவலகத்தை அடைந்தது. பேரணியின் போது தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம், இளம் வக்காளர்கள் பதிவு செய்வதன் அவசியம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். தொடர்ந்து வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Next Story