குடற்புழு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு


குடற்புழு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
x

முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத் துறையுடன் இணைந்து தேசிய குடற்புழு நீக்க நாள் மற்றும் குடற்புழு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

தலைமைஆசிரியர் சீ.தனஞ்செழியன் தலைமை தாங்கினார். உதவி தலைமைஆசிரியர் இளையராஜா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முள்ளண்டிரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் யுவரஞ்சனி கலந்து கொண்டு குடற்புழு நீக்க மாத்திரையின் அவசியம், குடற்புழுக்களின் வகைகள், அவை மனித உடலில் செல்லும் வழிகள், குடற்புழு தாக்கம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குடற்புழு பாதிப்பினால் ஏற்படும் ரத்தசோகையில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.

அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆண்டுக்கு இருமுறை உட்கொண்டு ரத்தசோகை குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

சுகாதார ஆய்வாளர்கள் ராமன், பிரசாந்த், செவிலியர்கள் ராஜேஸ்வரி, தனலட்சுமி மற்றும் தன்னார்வலர் ஆஷா உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் லட்சுமணன் நன்றி கூறினார்.


Next Story