விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி


விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
x

பூதூரில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்டம், ஊசூர் அருகே பூதூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் ஆத்மா திட்டம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசிவகுமார் தலைமை தாங்கினார். வேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் கிஷோர்வர்ஷன் வரவேற்றார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கலை குழுவினர் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆத்மா திட்ட அலுவலர்கள் வெங்கடேசன் மற்றும் பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story