பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு


பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரிய வகை கழுகுகள் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

அரிய வகை கழுகுகள் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு

அழிந்து வரும் கழுகுகளை பாதுகாக்க தமிழகத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தனியார் அமைப்புகளும் கழுகுகளை பாதுகாக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் அருளகம் என்ற இயற்கை பாதுகாப்பு அமைப்பு மூலம் நீலகிரி மாவட்டம் எப்பநாடு, கூக்கல்தொரை, சின்ன குன்னூர், உல்லத்தி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பொம்மலாட்டம் மூலம் அரிய வகை பாறு கழுகுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இனப்பெருக்க மையங்கள்

இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் கூறியதாவது:- பாறு கழுகுகள், தற்போது மிகவும் அரிதாகிவிட்டன. கால்நடைகளுக்கு பயன்படுத்தும் வலி நிவாரண மருந்துகளின் வீரியமானது, அவை இறந்த பிறகு உடலை தின்னும் பாறு கழுகுகளின் அழிவுக்கு பெரிதும் காரணமாக அமைந்தது. எனவே கால்நடை வலி நிவாரண மருந்துகளான டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், நிமுசிலாய்ட்ஸ், புளூநிக்சின், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளை தவிர்த்து மாற்று மருந்துகளான மெலாக்சிகம், டோல்பினமிக் ஆசிட் மருந்துகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இயற்கையாக இறந்த விலங்குகளை புதைக்காமலும், எரிக்காமலும் பாறு கழுகுகளுக்கு உணவாக்க வேண்டும். பாறு கழுகு பாதுகாப்புக்கு இனப்பெருக்க மையங்களை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story