வேளாண்மையில் புதிய தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வேளாண்மையில் புதிய தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன கல்லுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் துர்கா ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அலுவலர் மேரி வீனஸ், உதவி பேராசிரியர் ராஜலட்சுமி மற்றும் விவசாயிகள், ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியின் இறுதியில் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவிகள் மரக்கன்றுகளை வழங்கினர்.
Related Tags :
Next Story