தேசிய மக்கள் நீதிமன்றம்:விழிப்புணர்வு பிரசார வாகன ஊர்வலம்


தேசிய மக்கள் நீதிமன்றம்:விழிப்புணர்வு பிரசார வாகன ஊர்வலம்
x

தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுவதையொட்டி விழிப்புணர்வு பிரசார வாகன ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

விழிப்புணர்வு பிரசாரம்

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக விழிப்புணர்வு பிரசார வாகன ஊர்வலம் நடந்தது. இந்த எல்.இ.டி. பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார். தேசிய மக்கள் நீதிமன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விதைப்பந்து வழங்கினார்.

இது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை மாவட்ட நீதிபதி கூறியதாவது:-

தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அப்படிப்பட்ட வழக்குகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கத்துடன் கிருஷ்ணகிரி தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 9-ந் தேதி நடைபெறவுள்ளது. பொதுமக்கள் மற்றும் வழக்காளர்கள் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரசம் வழியாக நிரந்தர தீர்வு காணலாம்.

வழக்குகளுக்கு தீர்வு

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்களும் வழக்காளர்களும் பயன்படுத்திக் கொண்டு வழக்குகளே இல்லாத நிலைமை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், குடும்ப நல நீதிபதி நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, சிறப்பு சார்பு நீதிபதி அஷ்வஹ் அகமது, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ், இருதயமேரி, நீதித்துறை நடுவர்கள் கார்த்திக் ஆசாத், ஸ்ரீவர்ஸ்தவா, வக்கீல்கள் சங்க செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story