மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க விழிப்புணர்வு வாகனங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க விழிப்புணர்வு வாகனங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 July 2022 10:17 AM IST (Updated: 27 July 2022 10:20 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். பள்ளிகளில் மருத்துவ முகாம், தன்னமிக்கை குறும்படம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story