போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு வீடியோ
போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
திருச்சி
திருச்சி மாநகரில் சமீப காலமாக ஓடும் பஸ்சில் ஜேப்படி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள், இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாநகர போலீசார் குற்றங்களை தடுக்க எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மாற்று திட்டங்களை தீட்டி தங்கள் தொழிலை தொடர்கிறார்கள்.
இந்தநிலையில் திருச்சி மாநகர தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் கருணாகரன், தற்போது பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் பாலக்கரை வழியாக செல்லும் பஸ்களை பஸ்நிறுத்தத்தில் நிறுத்தி, பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதுதொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story