புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் நகராட்சி சார்பில் புகையில்லா போகி கொண்டாடும் வகையில் புகை நமக்கு பகை, புகையில்லா போகி நமக்கு பெருமை என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பசுமைப் பொங்கல் மரம் நடும் விழா ஆகியவை நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதில் சுமார் 100 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு புகையில்லா போகி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் பழைய நகராட்சி அலுவலகத்திலிருந்து, தேரடி, பெருமாள் கோவில் தெரு, சத்திரம் வழியாக சென்று மீண்டும் பழைய நகராட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பசுமைப்பொங்கல் கொண்டாடும் வகையில் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்.நகரில் உள்ள நகராட்சி பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, நகராட்சி பகுதிகளிலும், நீர் நிலைகளிலுள்ள கரைகளிலும் மரக்கன்றுகளை நட நகராட்சி அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story