செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி


செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் உணவு வழங்கும் நிகழ்ச்சி செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் நேற்று நடந்தது. இதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவுகளான அரிசி, சிறுதானியங்களில் போதிய சத்துக்கள் இருக்கும்போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களால் செய்யப்பட்ட தயிர் சாதம், தக்காளி சோறு, தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல், அவல் கஞ்சி போன்றவை வழங்கப்பட்டன.இதில் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், தங்க.குமரவேல், ரவிச்சந்திரன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் வேலுமணி, விக்னேஷ், அரு.சீர்.தங்கராசு, பொய்யாமொழி, வெள்ளைச்சாமி பாக்கியராஜ், அருண் சுபாஷ், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story