பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்
பட்டுக்கோட்டையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டையில் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு சார்பில் சரக அளவிலான அறிமுக கூட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மகாராஜசமுத்திரம், நாடியம்பாள்புரம், பட்டுக்கோட்டை நகரம், நம்பிவயல், கரம்பயம், ஏனாதிக்கரம்பை, சாந்தாங்காடு, பாளமுத்தி உள்பட 39 கிராமங்களைச் சேர்ந்த 60 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது, முதியவர்கள், கால்நடைகளை பத்திரமாக மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து மாநில அளவிலான பயிற்றுனர் டெய்சிராணி செயல்முறை விளக்கம் அளித்தார். கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் ராமலிங்கம், சுகன்யா மற்றும் பல்வேறு வருவாய் கிராமங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், மீட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story