வெறி நாய்க்கடி தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்
வெறி நாய்க்கடி தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்
பொங்கலூர்
பொங்கலூர் வட்டார சுகாதார துறை சார்பில் உகாயனூர் ஊராட்சி அகிலாண்டபுரத்தில் வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும் தெருநாய்கள் பெருக்கம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாய்க்கடி தடுப்பூசி மற்றும் நாய்க்கடி பட்டால் உடனடியாக செய்யவேண்டியவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் மிக வேகமாக பெருகிவரும் தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசின் மூலம் நாய்களுக்கு செய்யப்படும் கருத்தடை சிகிச்சை பற்றியும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு போடப்படும் தடுப்பூசி பற்றியும் பொங்கலூர் கால்நடை மருத்துவர்கள் உமாசங்கர் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
நிகழ்வில் பொங்கலூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் ஜோதி, உகாயனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கந்தசாமி செய்திருந்தார்.