இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசார நடை பயணம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசார நடை பயணம்
திருப்பூர்
பொங்கலூர்
மத்தியில் உள்ள பா.ஜனதா கட்சியின் ஆட்சியை அகற்றுவோம் என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார நடைபயணம் நடைபெற்று வருகிறது. இந்த நடை பயணம் கடந்த 5-ந் தேதி முதல் 20 -ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பொங்கலூர் ஒன்றிய பகுதியில் பிரசார நடைபயணம் நடைபெற்றது. இந்த நடை பயணத்தின் போது பல்வேறு இடங்களுக்கு சென்ற கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்த பிரசார நடை பயணத்தில் ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story