சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்


சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்
x

விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி, ஒன்றியக்குழு துணை தலைவர் உஷா நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் வரவேற்று பேசினார். ஊர்வலத்தை பன்னீர்.எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர்கள் , ஊராட்சி துணைத் தலைவர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் தியாகராஜன் நன்றி கூறினார்.இதைப்போல சட்டநாதபுரம் ஊராட்சியில் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையிலும், திருப்புங்கூர் ஊராட்சியில் தலைவர் மாலினி தலைமையிலும், கன்னியாகுடி ஊராட்சியில் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், அத்தியூர் ஊராட்சியில் தலைவர் அனந்தநாயகி பாஸ்கர் தலைமையிலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


Next Story