விழிப்புணர்வு ஊர்வலம்
குத்தாலம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
மயிலாடுதுறை
குத்தாலம்;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் "குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்குவோம்" என்ற விளம்பர வாசகத்துடன் தமிழக அரசின் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகனம் பள்ளிக்கு வந்தது. பின்னர் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு வட்டார கல்வி அலுவலர் புஷ்பலதா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் புனிதா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சத்தியபாமா வரவேற்றார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story