அயோத்தி சாமியாரின் உருவபடம் எரிப்பு


அயோத்தி சாமியாரின் உருவபடம் எரிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறையில் அயோத்தி சாமியாரின் உருவபடத்தை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

குழித்துறையில் அயோத்தி சாமியாரின் உருவபடத்தை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு தரப்படும் என அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா கூறியிருந்தார். இதை கண்டித்து சாமியாரின் உருவப்படத்தை குழித்துறை சந்திப்பில் தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகரச் செயலாளர் வினு குமார், மாவட்ட நிர்வாகி மரிய சிசுகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story