அயோத்திதாசர் பண்டிதர் பிறந்த நாள் விழா


அயோத்திதாசர் பண்டிதர் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 22 May 2023 12:30 AM IST (Updated: 22 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் அயோத்திதாசர் பண்டிதர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்க நிறுவனர் அயோத்திதாசர் பண்டிதரின் 179-வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூர் பஸ்நிலையம் முன்பு நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் கலைவேந்தன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநிலத் துணை செயலாளர் நெல்லை கார்த்திக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ் குட்டி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story