ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா


ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில், நல்லம்பள்ளியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஒன்றாக நிறுத்தி, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு பிரசாதத்தை நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் மாநில நிர்வாகிகள் அன்புமணி, சண்முகராஜ், மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை, சிவா, மதன்குமார், தங்கவேல், முனிரத்தினம்உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story