விருத்தாசலத்தில்அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


விருத்தாசலத்தில்அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள பூர்ணகலா, புஷ்கலா உடனுறை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை கடந்த 29-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து, மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story