அய்யப்ப பக்தர் சாவு
தேவதானப்பட்டி அருகே கார் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர் பலியானார்.
தேனி
விழுப்புரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கேரள மாநிலம் சபரிமலைக்கு ஒரு காரில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின்ரோட்டில் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி என்னுமிடத்தில் அவர்கள் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறுமுகம் (வயது 51), ராஜவேல் (35) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story