குற்றாலம் அருவியில் நீராடிய அய்யப்ப பக்தர்கள்
குற்றாலம் அருவியில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக நீராடி சென்றனர்.
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். மேலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு தென்காசி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. எனவே அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்தில் குவிந்து ஆனந்தமாக நீராடி வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களும் அருவிகளில் குளித்து செல்கின்றனர். நேற்று காலையில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்துக்கு கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் இருந்தனர். மேலும் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் வந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக நீராடி சென்றனர்.
Related Tags :
Next Story