கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி  அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

விழுப்புரம்


கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்ப சாமியை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை அய்யப்ப சாமி கோவிலில் நடைபெறும் மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப சாமியை வேண்டி பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினார்கள். இதையொட்டி விழுப்புரம் அருகே காணையில் உள்ள அய்யப்பன் சன்னதியில் அதிகாலை அய்யப்ப பக்தர்கள் காவி உடை அணிந்து பயபக்தியுடன் துளசி மற்றும் ருத்ராட்சை மாலை அணிந்து கொண்டனர். கோவில் குருசாமி, அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.

மண்டல பூஜை

அதேபோல் விழுப்புரம் பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவில், மருதூர் மாரியம்மன் கோவில், ரெயிலடி விநாயகர், ரங்கநாதன் சாலை சித்தி விநாயகர், காமராஜர் வீதி அமராபதி விநாயகர், பெருமாள் கோவில் வீதியில் உள்ள கோட்டை விநாயகர், மேலத்தெரு மாரியம்மன், கீழ்ப்பெரும்பாக்கம் திரவுபதியம்மன், சபரிகிரீசன் கோவில்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

இவர்கள் அனைவரும் தினசரி அய்யப்ப சாமியை வேண்டி பூஜை செய்து 42-ம் நாள் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க இருக்கிறார்கள்.


Next Story