அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை விழா


அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை விழா
x

சேரன்மாதேவியில் அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை விழா நடந்தது

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 28-வது ஆண்டு கன்னி பூஜை விழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 6 மணிக்கு விக்ரக அபிஷேக பூஜை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணிக்கு கன்னி பூஜையும், சிறப்பு பஜனை விழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story