உலக நன்மைக்காக அய்யப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை


உலக நன்மைக்காக அய்யப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை
x

உலக நன்மைக்காக அய்யப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை செய்திருந்தனர். உலக நன்மைக்காக கன்னிபூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.இவர்கள் சோழவந்தான் மற்றும் தென்கரையில் உள்ள அய்யப்பன் கோவிலில் வந்து தினசரி பஜனை மற்றும் பூஜையில் கலந்து கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.விக்கிரமங்கலத்தில் அய்யப்பன் கோவில் கட்டுவதற்கு பக்தர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதற்காக இங்குள்ள மாரியம்மன்கோவில் அருகில் உள்ள காலி இடத்தில் அய்யப்பன் கோவிலும் அறநெறி நூலகமும் அமைக்க விக்கிரமங்கலம் ஊராட்சியின் சார்பாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. .இதனால் இந்த ஆண்டு அங்குள்ள காலி இடத்தில் மேடை மற்றும் அலங்கார பந்தல் அமைத்து அங்கு அய்யப்பன் திருவுருவப்படத்தை வைத்து சிறப்பு பூஜை செய்திருந்தனர்.

உலக நன்மைக்காக கன்னிபூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலியுகநாதன், ஒன்றிய தலைவர் கவிதாராஜா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வி செல்வம், ஊராட்சி செயலாளர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து உலக நன்மைக்காக திருவிளக்குபூஜை, சிறப்புஅர்ச்சனை நடைபெற்றது.


Next Story