குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் உற்சாக குளியல்


குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் உற்சாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகரித்தது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்தாலும், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சபரிமலை சீசன் என்பதால் நேற்று அருவிகளில் அய்யப்ப பக்தர்களும், விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளும் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


Next Story