10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அய்யப்பனுக்கு அலங்காரம்
வாணியம்பாடியில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அய்யப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலை அய்யப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை செல்வது வழக்கம்.
விரத நாட்களின் போது 48 நாட்களும் அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அதன்படி 2022-ம் ஆண்டின் கடைசி நாளான இன்று அய்யப்பனுக்கு ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மூலஸ்தான அறை முழுவதும் 2000, 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அதே போல உற்சவமூர்த்தி மற்றும் விநாயகர் சிலைகளும் ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டு சுவர்ண ரூப அலங்காரத்தில் அருள்பாளித்த அய்யப்பனை சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.