அய்யப்பன் கோவில் தேர்த்திருவிழா


அய்யப்பன் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

தேரோட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அய்ப்பன் கோவிலில், அய்யப்ப பஜனை சபா சார்பில் 68-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நாள்தோறும் காலையில் விசேஷ அபிஷேகங்கள், பூஜைகள், சிறப்பு நிறமாலை பூஜை, அன்னதானம், அனைத்து மகளிர் சங்கத்தினரின் திருவிளக்கு பூஜை, ஹரிஹரன் பஜனை சபா சார்பில் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் நேற்று முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா காலை 8.30 மணிக்கு நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது செண்டை மேளம் முழங்க தேர் புறப்பட்டு வென்லாக் சாலை, கமர்சியல் சாலை வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

கால பைரவர்

மாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் விளக்குகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதில் பஞ்ச வாத்தியத்துடன் அய்யப்பன் பவனி வந்தார். லோயர் பஜார், மெயின் பஜார் வழியாக மீண்டும் அய்யப்பன் கோவிலில் தேரோட்டம் நிறைவடைந்தது.

இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோன்று கூடலூர்-ஓவேலி சாலையில் உள்ள சக்தி முனீஸ்வரன் கோவில் வளாக சன்னதியில் இருக்கும் கால பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு வடை மாலை சாத்தப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story