அய்யப்ப பக்தர்கள் அலகு குத்தி, தேர் இழுத்து வழிபாடு


அய்யப்ப பக்தர்கள் அலகு குத்தி, தேர் இழுத்து வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:30 AM IST (Updated: 1 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

அய்யப்ப பக்தர்கள் அலகு குத்தி, தேர் இழுத்து வழிபாடு

திண்டுக்கல்


வத்தலக்குண்டுவில், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் அலகு குத்தி, தேர் இழுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும், அலகு குத்தி, தேர் இழுத்து வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் மஞ்சளாற்று விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அலகு குத்தியும், அய்யப்ப சாமி உருவப்படம் வைக்கப்பட்ட தேரை இழுத்து ஊர்வலமாக சென்றும் வழிபாடு நடத்தினர். ஊர்வலத்தில் ஏழு சிறுமிகளை சக்தி பெண்களாக பாவித்து, அவர்களை முன்னால் நடந்து செல்லவிட்டு அவர்களுக்கு பின்னால் அய்யப்ப பக்தர்கள் சென்றனர். மஞ்சளாற்று விநாயகர் கோவில் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் பெரியகுளம் ரோடு, பஸ் நிலையம், மெயின் ரோடு, காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை, கடைவீதிவழியாக சென்று அய்யப்பன் கோவிலை அடைந்து நிறைவடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story