அய்யப்பசாமி சப்பர பவனி
நெல்லையில் அய்யப்பசாமி சப்பர பவனி நடந்தது.
நெல்லை டவுன் அய்யப்பா தேவா சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி நெல்லை டவுன் சுவாமி சன்னதியில் அய்யப்பபூஜை மற்றும் லட்சார்ச்சனை விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடந்து வந்தது. 26-ந்தேதி காலை 7 மணிக்கு 108 சங்காபிஷேகமும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பூதநாதர் ஆராதனையும், இரவில் அருளிசை பாடகர் ஹரியின் பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை, கஜபூஜை மற்றும் சிறப்பு பூஜைகளும், தர்மசாஸ்தா ஆராதனையும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு 41 தீபஜோதி அலங்கார காட்சியும் நடந்தது. இரவு 8.30 மணிக்கு அய்யப்பசாமி தர்மசாஸ்தா அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.