அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை பொதுக்குழு கூட்டம்
திருச்செந்தூரில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி வளாகத்தில் வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை பொதுக்குழு கூட்டம் நடந்தது. அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11 நாட்கள் நடக்கிறது. விழா நிகழ்ச்சிகள் மற்றும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாசி அவதார தின விழா வரவு-செலவு கணக்குகள் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. அவதாரபதியில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்த தீர்மானங்களும் சபையில் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.
சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், துணைத்தலைவர் அய்யாபழம், இணை தலைவர்கள் கோபால், பால்சாமி, விஜயகுமார், இணை செயலாளர்கள் தங்ககிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், வரதராஜ பெருமாள், செல்வின், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துகுட்டி, ஆதிநாராயணன், கணேசன், கண்ணன், செல்வராஜ், சந்தானம், கிருஷ்ணவேணி, பாலகிருஷ்ணன், சிவலிங்கம், கனி, கோபால், சீனிவாசன், சஞ்சய், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.