பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்ைவ கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்ைவ கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். பா.ஜனதா. நீலகிரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார் கலந்து கொண்டு பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், காடேஸ்வரா தங்கராஜ், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் மண்டல தலைவர் பூபதி நன்றி கூறினார். இதில் மாவட்ட பொருளாளர் நடராஜ், மாவட்ட துணை தலைவர்கள் குணசேகர், பாலு, கலாமணி, ஜோதிமணி உள்பட மாவட்ட, மண்டல, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.