பாபநாசம் ஒன்றியக்குழு கூட்டம்


பாபநாசம் ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2023 2:46 AM IST (Updated: 16 Jun 2023 12:25 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் தலைமையில் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை தாங்கினார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் கிராம ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றியக்குழு துணை தலைவர் தியாக. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பாபநாசம் ஒன்றியம் ஓலைப்பாடி ஊராட்சி, எருமைப்பட்டி குடியானத் தெருவில்ரூ.5லட்சம் மதிப்பீட்டில் கருங்கல் ஜல்லி மற்றும் தார்சாலை அமைப்பது, கபிஸ்தலம் ஊராட்சியில் தேசிய சுகாதார இயக்கம் 15-வது நிதிக்குழு மானியம் சுகாதார நிதியின் கீழ் வட்டார பொது சுகாதார மையம் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் கூட்டத்தில் வாழ்க்கை, தூத்தூர் கிராமங்களுக்கு இடையேயான தடுப்பணைகள் அமைத்து கொடுத்தால் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடர எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story