பாபநாசம் ஒன்றியக்குழு கூட்டம்
பாபநாசம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடந்தத. ஒன்றிய ஆணையர் சிவக்குமார், துணைத் தலைவர் தியாகை பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகள் குறித்து பேசினர். ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோர் பேசுகையில், ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றனர். மத்திய,மாநில அரசு திட்ட பணிகளான சாலை, குடிநீர்,மின்சாரம் ஆகிய பணிகளும் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மன்ற பொருட்கள் குறித்து வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும், ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.