தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு
அவினாசி
திருப்பூர் மாவட்டம், அவினாசி போஸ்ட் ஆபீஸ் வீதி பங்களா தோட்டத்தில் வசிப்பவர் நடராஜன். கார் டிரைவர். இவருடைய மனைவி சத்யா. இவர்களது 4 வயது ஆண் குழந்தை ரகுநந்தன். ரகுநந்தனை இந்த ஆண்டுதான் அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருந்தனர்.
இந்த நிலையில் சத்யா, தான் வேலை பார்க்கும் சேவாலயத்திற்கு குழந்தை ரகுநந்தனை அழைத்து வந்திருந்தார். அவன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். வேலை முடிந்து சத்யா வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பழைய பஸ் நிலைய பகுதி முழுவதும் நீண்ட நேரம் ேதடி பார்த்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் ரகுநந்தன் மூழ்கி கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவனை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்குபரிசோதித்த டாக்டர் அவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.