தொப்புள் கொடியுடன் வாய்க்காலில் பிணமாக கிடந்த பெண் சிசு


தொப்புள் கொடியுடன் வாய்க்காலில் பிணமாக கிடந்த பெண் சிசு
x

திட்டக்குடியில் தொப்புள் கொடியுடன் வாய்க்காலில் பெண் சிசு பிணமாக கிடந்தது.

கடலூர்

திட்டக்குடி:

திட்டக்குடி அருகே கோழியூரில் உள்ள வெலிங்டன் ஏரி பாசன வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பெண் சிசு ஒன்று பிணமாக கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தொிவித்தனா். அதன் போில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் ஆகியோா் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் உதவியுடன், பெண் சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் முறை தவறிய தொடர்பில் குழந்தை பிறந்ததால் அதனை அதன் தாயே பாசன வாய்க்காலில் வீசி கொலை செய்தாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story