750 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
சோளிங்கர், அரக்கோணம், நெமிலி பகுதிகளில் 750 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. அமைச்சர் ஆர்.காந்தி சீர்வரிசை வழங்கினார்.
சோளிங்கர், அரக்கோணம், நெமிலி பகுதிகளில் 750 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. அமைச்சர் ஆர்.காந்தி சீர்வரிசை வழங்கினார்.
சமுதாய வளைகாப்பு
சோளிங்கரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலமாக 450 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் வசந்திஆனந்தன், மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் அன்பரசி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சீர்வரிசைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஒன்றியத்துக்குட்பட்ட கர்ப்பிணிகள், உறவினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றியக் குழு தலைவர்கள் கலைக்குமார், பூங்கொடி ஆனந்தன், மாவட்ட குழு துணை தலைவர் நாகராஜ், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்விஅசோகன், துணைத் தலைவர் பழனி, நகர செயலாளர் கோபி, ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், பூர்ணசந்தர், ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, சாவித்திரிபெருமாள், ராமன், நகராட்சி உறுப்பினர்கள் அன்பரசு, சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்னர்.
அரக்கோணம்
அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து, சுமார் 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை தட்டுகளையும், 5 வகையான உணவுகளையும் வழங்கி வாழ்த்தினார். முன்னதாக, வளைகாப்பு நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து குறித்த உணவு கண்காட்சி அரங்கிணையும் அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார். நேற்று மொத்தம் 750 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது.
நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா சவுந்தர், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலு, அரக்கோணம் நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அம்பிகா பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.