கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
தண்டராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. மு.பெ.கிரி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவை வழங்கினார். விழாவில் தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், துணைத்தலைவர் பூங்கொடி நல்லதம்பி, ஒன்றிய செயலாளர் கோ.ரமேஷ், துணை செயலாளர் எல்.ஐ.சி.வேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன், பொதுக்குழு உறுப்பினர் ஜோதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் செல்லின் மேரி, சந்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மேற்பார்வையாளர் நிர்மலா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story