300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
செஞ்சி ஒன்றியத்தில் 300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் நடத்தி வைத்தார்.
செஞ்சி:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா அப்பம்பட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி, வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர்கள் மல்லிகாகுமார், பச்சையப்பன், மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிருந்தா சக்தி முருகன், சோகுப்பம் ராஜேந்திரன், விவசாய அலுவலர் பாலு, சித்த மருத்துவ புவனாம்பிகை, நிர்வாகிகள் சையத் இக்பால், சோடாபாஷா, மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா நன்றி கூறினார்.