அடுத்தடுத்து பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்


அடுத்தடுத்து பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்
x

திண்டிவனத்தில் அடுத்தடுத்து பஸ்கள் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

கொடைக்கானலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஆம்னிபஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை தாம்பரத்தை சேர்ந்த தேவா (வயது 38) என்பவர் ஓட்டினார். திண்டிவனம், சென்னை புறவழிச்சாலையில் இந்த பஸ் நேற்று காலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது டீசல் இல்லாமல் அந்த பஸ் நின்றது. அந்த சமயத்தில் பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மோதியது. அப்போது பின்னால் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஆம்னி பஸ் மீது மோதியது. அடுத்தடுத்து பஸ்கள் மோதிய விபத்தில் பொள்ளாச்சி அங்களகுறிச்சியை சேர்ந்த சின்னசாமி மகள் லலிதாம்பிகை (30), சென்னை ஊரப்பாக்கம் கார்த்திசன் மகள் ரேவதி (23), சென்னை காந்திநகர் ராஜாமணி (62) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 7 பேர் லேசான காயமடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story