பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பண்ருட்டியில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்

பண்ருட்டி,

தனியார் நிதி நிறுவனங்களின் கந்து வட்டி கொடுமைகளை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் நடராஜன் தலைமை தாங்கினார். பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் சந்தனகுமார், பொதுச் செயலாளர் நிர்மல்குமார், பொருளாளர் வீரசுந்தரம், இளைஞரணி அமைப்பாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் மணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர்கள் தணிகைச்செல்வன், அய்யாசாமி, நிர்வாகிகள் வக்கீல் வைத்தீஸ்வரன், திருமாறன், திருவள்ளுவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்முருகன், அருட்செல்வன், மாவட்ட அமைப்பாளர் அருள்மொழி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு கந்துவட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களை கண்டித்து கண்டன உரையாற்றினர். இதில் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி சட்டமன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story