ப்ரீ பயர் விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது - மதுரை ஐகோர்ட்டு
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை
தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
இது தொடர்பானவழக்கில் மேலும் கூறிய நீதிபதி ;
இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.தற்போது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை. தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ப்ரீ பயர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பதுபோல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
Related Tags :
Next Story