போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
திருநெல்வேலி
வள்ளியூர்:
கூடங்குளம் அருகே உள்ள பெருமணலை சேர்ந்தவர் செல்விஸ்டன். இவரை செட்டிகுளத்தை சேர்ந்த மீன்ராஜா என்பவர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அப்ேபாதைய கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜபால் என்பவர் வழக்கு விசாரணைக்காக வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு ராஜபால் ஆஜராகவில்லை.
இதையடுத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பர்சத்பேகம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ராஜபாலுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். ராஜபால் தற்போது சென்னை வேப்பேரியில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story