கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்-கலெக்டரிடம் மனு


கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்-கலெக்டரிடம் மனு
x

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், கலெக்டரிடம் மனு வழங்கினார்.

திருநெல்வேலி

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், கலெக்டரிடம் மனு வழங்கினார்.

கலெக்டரிடம் மனு

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மீனவர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வால்டர் எட்வின் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:-

தூண்டில் வளைவு

திசையன்விளை தாலுகாவில் உள்ள கூடுதாழை மீனவ கிராமத்தில் மக்கள் பாதுகாப்பிற்காகவும், தொழில் செய்வதற்கு வசதியாகவும், கடற்கரையில் தூண்டில் வளைவு கேட்டு பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இதுவரைஎந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அருகாமையில் உள்ள உவரி மற்றும் பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் கூடுதாழையில் கூடுதல் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதி மக்கள் 17 நாட்களாக தூண்டில் வளைவு கேட்டு அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

போர்க்கால அடிப்படையில்...

இந்தநிலை தொடர்ந்தால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அதை சார்ந்துள்ள வியாபார பகுதிகளான திசையன்விளை, கூடங்குளம், வள்ளியூர் ஆகிய பகுதிகளில் வியாபாரங்கள் பெரிதளவில் பாதிப்படையும். மேலும் மீன்வளத்துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் நேரில் வந்து கடல் அரிப்பு பாதிப்புகளை பார்வையிடவில்லை என்ற ஆதங்கம் மக்களுக்கு உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் கூடுதாழையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக் வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story